குடிவரவு தகவல் கசிவு அந்தரங்கத்தன்மை முறைப்பாடு

பின்னணி

2014-ஆம் ஆண்டு ஃபெப்ருவரி மாதம் 10-ஆம் திகதியன்று, குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களமானது (தற்போது உள்துறைத் திணைக்களம்) (திணைக்களம்), தனிப்பட்டத் தகவல்களை உள்ளடக்கிக்கொண்ட தடுப்புக்காவல் அறிக்கை ஒன்றினை, தமது இணையதளத்தில் தவறுதலாக வெளியிட்டு விட்டது (தகவல் கசிவு)

இந்த அறிக்கையானது, 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் திகதியன்று குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த 9,258 நபர்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டிருந்தது.

திணைக்களத்தினால் தவறுதலாக எவரெவர் தகவல்கள் வெளியிடப்பட்டனவோ அந்நபர்கள் அனைவரின்(ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள்) சார்பாக, 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் திகதியன்று, பிரதிநிதித்துவ முறைப்பாடு ஒன்று ஆஸ்திரேலிய தகவல் ஆணையரின் அலுவலகத்தில் (OAIC) தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் புகாரானது திணைக்களத்தினை ஒரு மன்னிப்பையும் இழப்பீட்டையும் வழங்குமாறு கோரியது.

2018-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 9-ஆம் திகதியன்று, முதன்மையாக பிரதிநிதித்துவம் வகித்த புகார்தாரரின் வழக்கறிஞர் தமது கட்சிக்காரர் இறந்து விட்டார் என்று OAIC-க்கு அறிவித்தார். 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் திகதியன்று அந்தரங்கத்தகவல் சட்டம் 1988 (காமன்வெல்த்) s 38B(1) (அந்தரங்கத்தகவல் சட்டம்)-இனைப் பின்பற்றி முதன்மையாக பிரதிநிதித்துவம் வகித்த புகார்தாரரின் இடத்தில் வேறொரு ஒத்த பண்புடைய குழு உறுப்பினரை (பிரதிநிதித்துவ புகார்தாரர்) மாற்றியமர்த்துவது என்பதாக ஆணையர் முடிவு செய்தார். பிரதிநிதித்துவ புகார்தாரருக்காக ஸ்லேட்டர் அன்ட் கோர்டன் (Slater & Gordon) செயல்படுகிறார்கள். ஸ்லேட்டர் அன்ட் கோர்டன் பற்றிய தகவல் அவர்களது இணையதளத்தில் இருக்கிறது.

ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள் இந்தத் தகவல் கசிவின் விளைவாக தாங்கள் இழப்பு அல்லது சேதம் என்றவகையில் இடர்பாடுகளுக்கு உள்ளானதாக கருதுவதோடு, அந்த இழப்பு அல்லது சேதத்துக்கான இழப்பீட்டை திரும்பப்பெறும் சாத்தியத்திற்கான வாய்ப்பை விரும்பினால், அவர்கள் தங்களது இழப்பு அல்லது சேதம் குறித்த தகவல்களை OAIC-க்கு 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் திகதி 4 மணிக்குள்ளாக அளித்திட வேண்டும் என்று ஆணையர் அவர்கள் அறிவிக்கை (அறிக்கை) விடுத்தார்.

இந்த அறிவுறுத்தலுக்கு மறுமொழி அளிப்பதற்கான காலக்கெடு திகதி 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. OAIC-யானது சில ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களுக்கு காலக்கெடு திகதியை மேலதிகமாக நீட்டித்து வழங்கி, சமர்ப்பிப்புகள் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் திகதியன்று இறுதி செய்யப்பட்டன.

தீர்மானம்

2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் திகதியன்று, அந்தரங்கத் தகவல் சட்டத்தின் 52-ஆவது பிரிவின் கீழ் ஆணையர் அவர்கள் ஒரு தீர்மானத்தை வெளியிட்டார் (தீர்மானம்).

இந்தத் தீர்மானமானது கண்டுகொண்டவை:

  • இந்தத் தகவல் கசிவின் விளைவாக, ஒரு தனிநபரின் அந்தரங்கத்தில் தலையீடு செய்ததான நடத்தையில் திணைக்களமானது ஈடுபட்டிருக்கிறது; மற்றும்
  • அறிவுறுத்தலுக்கு விடையளிக்கும் வகையில் சமர்ப்பிப்புகள் செய்த அல்லது அத்துடன் கூடி இழப்போ சேதமோ குறித்த ஆதாரம் அளித்த  ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களுக்கு (பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள்) ஆணையர் அவர்கள் தீர்மானித்த பாங்கின் படி இழப்பீடு செலுத்தப் படவேண்டும்.

பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களுக்கு கீழுள்ள அட்டவணையில் (அட்டவணை 1) அமைந்திருக்கும் இழப்பு அல்லது சேத வகைகளுடன் ஒத்துப்போகுமளவில் இழப்பீடு செலுத்தப் படவேண்டும் என்று ஆணையர் அவர்கள் தீர்மானித்துள்ளார்.

அட்டவணை 1

ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களால் அனுபவிக்கப்பட்ட இழப்பு அல்லது சேதத்தின் வகைகளும் மற்றும் இழப்பீட்டின் சுட்டிக்காட்டு அளவுக்குமான அட்டவணை

பொருளாதாரம் சாராத இழப்பு வகை

+ பொருளாதார இழப்பு (தனித்தனியான கணக்கீடு)

0

தனிநபரானவர் தகவல் கசிவின் விளைவால் ஏற்பட்ட இழப்பு அல்லது சேதத்தை உறுதிப்படுத்தும் ஒரு சமர்ப்பிப்போ அல்லது அதனுடன் ஆதாரமோ அளிக்கவில்லை

 

1

தகவல் கசிவின் விளைவாக, பொதுவான வரும்நிலை குறித்து அச்சநிலை, மனக்கலக்கம், கவலை அல்லது தர்மசங்கடம்

 

2

தகவல் கசிவின் விளைவாக, மிதமான வரும்நிலை குறித்து அச்சநிலை, பயம், வலியும் துயரமும், பெருங்கவலை அல்லது அவமானம், தூக்கமிழத்தல் அல்லது தலைவலி போன்றதான சிறு உடல் ரீதியான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஒரு மருத்துவ (ஆரோக்கிய) நிபுணரொருவருடன் கலந்தாலோசனை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

 

3

தகவல் கசிவின் விளைவாக, குறிப்பிடத்தக்க பெரியஅளவிலான காலம் நீடித்ததான வரும் நிலை வரும்நிலை குறித்து அச்சநிலை, பயம், வலியும் துயரமும், பெருங்கவலை அல்லது அவமானம், உளவியல் அல்லது வேறுவகையான தீங்கு ஏற்படுத்தக் கூடியதாகவும், ஒரு பொது மருத்துவரிடமிருந்து ஆணைபெற்ற விதி முறைப்படி சிகிச்சை பெறுவதை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

 

4

பாதித்த நிலை பெருகி வளர்வது அல்லது மேலும் மோசமடைவது, சிகிச்சைக்காக ஒரு மன நல ஆரோக்கிய நிபுணருக்கு ஒரு பரிந்துரையை விளைவிப்பதாக இருக்கும்

 

5

தகவல் கசிவின் விளைவாக கடுமையான இழப்பு அல்லது சேதம்

 

பொருளாதாரம் சாராத இழப்பு வகைகள்

வகை 0: $0

வகை 1: $500 - $4000

வகை 2: $4001 - $8000

வகை 3: $8001 - $12,000

வகை 4: $12,001 - $20,000

வகை 5: > $20,000

அட்டவணை 1 பொருளாதாரம் சாராத இழப்புக்கான இழப்பீட்டைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுவதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது. பொருளாதார இழப்புக்கான சேதத்தை கணக்கிட்டுக் கொள்ள உதவும் நோக்கம் இதற்கு கிடையாது. தகவல் கசிவின் விளைவாக தாங்கள் பொருளாதார இழப்புக்கு உள்ளானதாக கோரித்தும், அந்த இழப்பை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரம் அளித்தும் இருக்கின்ற, பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களுக்கு பொருளாதார இழப்பினை செலுத்த வேண்டும். பொருளாதார இழப்பின் சேதத்தை அவரவர் சூழலுக்கு தக்கவாறு தனித்தனியாக மதிப்பீட்டுக் கொள்ளப்படும்.

தகவல் கசிவின் விளைவாக இழப்பு அல்லது சேதத்துக்காக இழப்பீடு செலுத்தப் படவேண்டிய பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களிடமிருந்தான கோரல்களை மதிப்பிடும் போதும் இறுதிசெய்துகொள்ளும் போதும் திணைக்களமானது பின்பற்ற வேண்டிய நடைமுறையை இந்தத் தீர்மானமானது ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த நடைமுறையானது உட்படுத்தியிருப்பது, சுருக்கமாக:

  • திணைக்களமானது, ஒவ்வொரு பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினருக்கும், அவர்கள் அளித்த சாமர்ப்பிப்புகள் அல்லது அதனுடன் இழப்பு அல்லது சேதத்துக்கான ஆதாரத்தின் அடிப்படையிலும், அத்துடன் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள் செய்த கோரல்களை பிரதிபலிப்பதற்கும் பொருளாதாரம் சாராத இழப்புக்கான இழப்பீட்டைக் கணக்கிட்டுக் கொள்ள உதவி செய்வதற்குமென விளக்கம் செய்யப்பட்ட வகைகளின் ஓர் அட்டவணையோடு ஒத்துப் போகும்படியும், ஓர் இழப்பீட்டுத் தொகையை ஒதுக்குவது
  • திணைக்களமானது முன்மொழியப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான மதிப்பீட்டிணையும் பொருத்தமான ஆதாரத்தையும் பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினருக்கு அல்லது அவர்களது பிரதிநிதிக்கு அறிவிப்பு செய்வதோடு இழப்பீட்டுத் தொகைக்கான அவர்களது உடன்பாட்டை நாடுவது
  • திணைக்களமும் பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினரும் இழப்பீட்டுத் தொகை குறித்து உடன்படாத நிலையில், திணைக்களமானது இழப்பீட்டுத் தொகையினை மறுமதிப்பிட்டுக் கொள்ளலாம் என்பதோடு இழப்பீட்டுக்கான மறுமதிப்பிட்ட தொகை குறித்து பங்குபெறும் பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினரிடமிருந்து அல்லது அவர்களது பிரதிநிதியிடமிருந்து உடன்பாடை நாடலாம்
  • மறுமதிப்பீட்டுக்குப் பிறகு பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர் அட்டவணையில் எந்த வகைக்குள் ஒதுக்கப் படுகிறார் என்பது குறித்து இதிலுள்ள தரப்பினர் உடன்பட இயலவில்லை என்ற அளவிலும், வேறுபட்ட நிலைகளுக்கு ஒவ்வொரு தரப்பும் அளித்த ஆதாரம் ஏதேனும் இருக்கிறது என்ற அளவிலும், பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினரானவர், பிரதிவாதியின் மதிப்பீட்டுக்கு இந்த மதிப்பீட்டைப் (ஏதேனுமிருப்பின்) பெற்றுக்கொண்ட பிறகு 28 நாட்களுக்குள்ளாக அல்லது மறுமதிப்பீட்டை பெற்றுக்கொண்ட பிறகு 28 நாட்களுக்கு உள்ளாக விடையளிக்காமல் இருந்து என்பதைத் தவிர, வல்லுநர் மதிப்பீட்டின் மூலமாக மேலதிக சமர்ப்பிப்புகள் பெறப்பட வேண்டும். திணைக்களமானதும் கூட, முதற்கட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து, ஒரு விடயத்தை எந்த வேளையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக்காக பரிந்தனுப்பலாம்.

இந்த நடைமுறையின் முடிவின் பொது ஏதேனும் தீர்வு செய்யப்படாமல் இருந்துகொண்டிருக்கும் கோரல்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை ஆணையர் அவர்கள் அறிவிப்பார்.

ஆணையர் அவர்கள், காலக்கெடு திகதிக்கு முன்னதாக OAIC-க்கு ஒரு சமர்ப்பிப்போ அல்லது அத்துடன் ஆதாரமோ அளிக்காதவரும் என்பதோடு வெளியேறும் தெரிவு செய்து கொள்ளாதவருமான ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள், அவர்களது அந்தரங்கத்தின் தலையீட்டின் விளைவாக இழப்பு அல்லது சேதத்துக்கு உள்ளாகியியதாக அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வில்லை என்று கண்டு கொண்டதோடு அந்த நபர்களின் தொடர்பாக ஏதேனும் மேலதிக நடவடிக்கை எடுப்பதென்பது பொருத்தமற்றதாகி விடும் என்றும் அறிவித்து விட்டார்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தத் தீர்ப்பானது எனக்கு பொருந்துமா என்று உறுதியாகத் தெரியவில்லை

நீங்கள் 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் திகதி நள்ளிரவின் போது ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி அல்லது கிறிஸ்துமஸ் தீவிலுள்ள குடிவரவு தடுப்புக்காவலில் இருந்தவராகவும் இந்த பிரதிநிதித்துவ புகாரின் அங்கமாக இருந்து கொள்வதிலிருந்து வெளியேறும் தெரிவை செய்து கொள்ளாதவாராகவும் இருக்கும் பட்சத்தில் ஓர் 'ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்' என்ற ரீதியில் உங்களுக்கு பொருந்துகிறது.

'ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள்' 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் திகதி நள்ளிரவின் போது, குடிவரவு தடுப்புக்காவல் அமைப்பிடங்களிலும் மாற்று தடுப்புக்காவல் இடங்களிலும் (பிரதான நிலப்பரப்பில் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்தவர்களான 3,967 பேர்களையும் கிறிஸ்துமஸ் தீவிலிருந்த குடிவரவு தடுப்புக்காவலில் 1,900 பேர்களையும் உள்ளடக்கிய) 5,867 நபர்கள், அத்துடன் ஒரு வதிவிட தீர்மானத்தின் கீழ் சமூகத்தில் வசித்துக் கொண்டிருந்தவர்களான 3,391 நபர்களையும் உள்ளடக்கியுள்ளது.

ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இழப்பீடு செலுத்தப்பட வேண்டுமா?

இல்லை.

அறிவிப்புக்கு விடையளிக்கும் வகையில் சமர்ப்பிப்புகள் செய்தவர்களான அல்லது/அத்துடன் ஆதாரம் அளித்தவர்களான ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களுக்கு, தகவல் கசிவின் விளைவாக ஒத்த பண்புடைய குழு உறுப்பினரானவர் இழப்பு அல்லது சேதத்துக்கு  உள்ளாகியிருக்கிறார் என்பதை அவை நிரூபிக்க, ஆணையர் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாங்கின்படி இழப்பீடு செலுத்தப் பட வேண்டும்.

காலக்கெடு திகதிக்கு முன்னதாக OAIC-க்கு ஒரு சமர்ப்பிப்போ அல்லது அத்துடன் இழப்பு அல்லது சேதம் குறித்த ஆதாரமோ அளிக்காதவர் என்பதோடு வெளியேறும் தெரிவு செய்து கொள்ளாதவருமான ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள் அவர்களது அந்தரங்கத்தில் தலையீட்டின் விளைவாக அவர்கள் இழப்பு அல்லது சேதம் அடைந்ததாக உறுதிப்படுத்திக் காண்பிக்க வில்லை. எனவே அவர்களுக்கு இழப்பீடு செலுத்தப் பட மாட்டாது.

எனக்கு இழப்பீடு செலுத்தப்பட வேண்டுமா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

அறிவிப்புக்கு விடையளிக்கும் வகையில் சமர்ப்பிப்புகள் செய்தவர்களான அல்லது/அத்துடன் ஆதாரம் அளித்தவர்களான ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களுக்கு, தகவல் கசிவின் விளைவாக ஒத்த பண்புடைய குழு உறுப்பினரானவர் இழப்பு அல்லது சேதத்துக்கு  உள்ளாகியிருக்கிறார் என்பதை அவை நிரூபிக்க, ஆணையர் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாங்கின்படி இழப்பீடு செலுத்தப் பட வேண்டும்.

இவ்வாறான பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களில் ஒருவராக நீங்கள் இருப்பின், திணைக்களமானது உங்கள் கோரல் குறித்து தமது மதிப்பீட்டினை உங்களுக்கு தெரிவிக்கவும், அவர்களது மதிப்பீட்டினை நீங்கள் ஏற்க அல்லது நிராகரிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவும் உங்களுக்கு எழுதுவார்கள். எழுத்து மூலமாக தெரியப்படுத்துவார்கள்.

ஆணையர் அவர்களால் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட படி இழப்பீடு செலுத்தப் பட வேண்டிய ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களா என்பது உங்களுக்கு தெரியாவிடில் நீங்கள் OAIC-யை enquiries@oaic.gov.au என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

அடுத்ததான நடவடிக்கைகள் என்ன?

  • பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களில் ஒருவராக நீங்கள் இருப்பின், அடுத்ததான நடவடிக்கை கீழ்காண்பவற்றை அறிவிப்பதற்காக உங்களுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்துவது திணைக்களத்தினதாக இருக்கும்:
  • அட்டவணை 1-இன் குறிப்புரை படி உங்கள் கோரல் எந்த இழப்பு அல்லது சேத வகையின் கீழ் வரும் என்பது குறித்த தமது மதிப்பீடு
  • பொருளாதாரம் சாராத இழப்பு அல்லது அத்துடன் பொருளாதார இழப்புக்காக உங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்த தமது மதிப்பீடு.
  • இந்த மதிப்பீட்டிற்கான தமது(அவர்களது) காரணங்கள், மற்றும் திணைக்களத்தினது மதிப்பீட்டுடன் உங்களின் உடன்பாடு அல்லது உடன்படாமையை சுட்டிக் காட்டுவதற்கு உங்களால் நிரப்பப் பட வேண்டிய ஒரு படிவம்.

திணைக்களத்தினது மதிப்பீட்டினை நீங்கள் பெற்றுக் கொண்டபிறகு அந்த மதிப்பீட்டுக்கு விடையளிக்க உங்களுக்கு 28 நாட்கள் கிடைக்கும். இந்த மதிப்பீட்டினை ஆலோசனை செய்ய உங்களுக்கு மேலதிக காலம் தேவைப்படின், ஒரு கால நீட்டிப்பை வேண்டிக் கொள்ள தயவுசெய்து திணைக்களத்தினை தொடர்பு கொள்க.

திணைக்களத்தினது மதிப்பீட்டோடு நான் உடன்பட்டால் என்னவாகும்?

உங்களது கோரலுக்கான இழப்பீட்டின் திணைக்களத்தினது மதிப்பீட்டுடன் நீங்கள் உடன்பட்டால், இந்த மதிப்பீட்டுடன் திணைக்களமானது உங்களுக்கு அளித்திட்ட விடையளிக்கும் படிவத்தினை நீங்கள் நிரப்பலாம். இந்த விடையளிக்கும் படிவத்தில் இந்த மதிப்பீட்டுடன் நீங்கள் உடன்படுவதாக திணைக்களத்திற்கு நீங்கள் கட்டாயமாக தெரிவித்தாக வேண்டும், அவ்வாறான பட்சத்தில் திணைக்களமானது ஏற்றுக்கொள்ளத்தக்க காலத்திற்குள்ளாக உடன்பட்ட இழப்பீட்டுத் தொகையினை உங்களது நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு செலுத்தி விடுவார்கள். பொதுவாக உடன்பாடு எட்டப்பட்ட 14 நாட்களுக்கு உள்ளாக, ஏதேனும் திரும்பப்பெறவேண்டிய கடப்பாடுகள் குறித்து அவ்வாறு பொருந்தினால், மெடிக்கேரிடமிருந்து உறுதிப்பாட்டுக்குட்பட்டு, நிகழ்ந்து விடும்.

உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற சில குறிப்பிட்ட தொழில்நிபுணத்துவ சேவைகள் சம்பந்தமாக, ஆனால் மெடிக்கேரால் செலுத்தப்பட்டு விட்ட வகையில், திரும்பப்பெறுதல்  மற்றும் அறிவிக்கை கடப்பாடுகள் எழுகின்றன. கூடுதல் தகவல்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன. ஓர் இழப்பீட்டு வழங்கல் நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் ஏதேனும் சென்டர்லிங்க் கொடுப்பனவுகளையும் பாதிக்கக்கூடும்.

திணைக்களத்தினது மதிப்பீட்டினை பெற்றுக் கொண்ட 28 நாட்களுக்கு உள்ளாக விடையளிப்புப் படிவத்தினை நீங்கள் திணைக்களத்திற்கு கட்டாயமாக திருப்பி அனுப்பிட வேண்டும்.

திணைக்களத்தினது மதிப்பீட்டோடு நான் உடன்படா விட்டால் என்னவாகும்?

உங்களது கோரலுக்கான இழப்பீட்டின் திணைக்களத்தினது மதிப்பீட்டுடன் நீங்கள் உடன்படா விட்டால், அவர்களது மதிப்பீட்டை நீங்கள் நிராகரிப்பதை சுட்டிக்காட்ட திணைக்களமானது உங்களுக்கு அளித்திட்ட விடையளிக்கும் படிவத்தினை நீங்கள் கட்டாயமாக நிரப்பிட வேண்டும். திணைக்களத்தினது மதிப்பீட்டினை பெற்றுக் கொண்ட 28 நாட்களுக்கு உள்ளாக விடையளிப்புப் படிவத்தினை நீங்கள் திணைக்களத்திற்கு கட்டாயமாக திருப்பி அனுப்பிட வேண்டும்.

பெரும்பாலான தருணங்களில், திணைக்களமானது உங்களது இழப்பீட்டிற்கான கோரலை மறுமதிப்பிடும். மற்றும் அவர்களது மறுமதிப்பீட்டினை ஏற்க அல்லது நிராகரிக்க உங்களுக்கு ஒரு மேலதிக வாய்ப்பு அளிக்கும். சில தருணங்களில், திணைக்களமானது மறுமதிப்பீட்டிற்கு ஈடாக உங்களது கோரலை வல்லுநர் மறுமதிப்பீட்டிற்காக பரிந்துரைக்க தெரிவு செய்யலாம், திணைக்களத்தினது மறுமதிப்பீட்டினை பெற்றுக் கொண்ட பிறகு அதனை ஏற்க அல்லது நிராகரிக்க உங்களுக்கு இன்னுமொரு 28 நாட்கள் கிடைக்கும். மறுபடியும் இந்த மறுமதிப்பீட்டினை ஆலோசனை செய்ய (மறுமதிப்பீட்டினை குறித்து அல்லது பற்றி ஆலோசனை செய்ய) உங்களுக்கு மேலதிக காலம் தேவைப்படின், ஒரு கால நீட்டிப்பை வேண்டிக் கொள்ள தயவுசெய்து திணைக்களத்தினை தொடர்பு கொள்க.

அட்டவணையில் எந்த வகைக்குள் நீங்கள் ஒதுக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதனை நீங்கள் ஏற்கவில்லை என்கிற அடிப்படையில் திணைக்களத்தினது மதிப்பீட்டினை நீங்கள் நிராகரித்தால் மற்றும் வேறுபட்ட நிலைகளுக்கு ஒவ்வொரு தரப்பும் அளித்த ஏதேனும் ஆதாரம் இருந்தால், வல்லுநர் மதிப்பீட்டின் மூலமாக மேலதிக சமர்ப்பிப்புகள் பெறப்படலாம். சில தருணங்களில், திணைக்களமானது அதற்குப் பதிலாக மறுமதிப்பீட்டிற்கு ஈடாக உங்களது கோரலை வல்லுநர் மதிப்பீட்டிற்காக பரிந்துரைக்க தெரிவு செய்யலாம்.

திணைக்களத்தினது மதிப்பீடு அல்லது மறுமதிப்பீட்டுக்கு நான் விடையளிக்கா விட்டால் என்னவாகும்?

ஏதேனும் கால நீட்டிப்பு வழங்கப்படுவதற்கு உட்பட்டு திணைக்களத்தினது மதிப்பீட்டுக்கு அந்த மதிப்பீட்டை நீங்கள் பெற்றுக்கொண்ட பிறகு 28 நாட்களுக்குள் நீங்கள் விடையளிக்கத் தவறினால் அல்லது திணைக்களத்தினது மறுமதிப்பீட்டுக்கு(ஏதேனுமிருப்பின்), அந்த மதிப்பீட்டை நீங்கள் பெற்றுக்கொண்ட 28 நாட்களுக்குள் நீங்கள் விடையளிக்கத் தவறினால், நீங்கள் விடையளிக்க வில்லை என்பதனை திணைக்களமானது OAIC-க்கு அறிவிக்கும்; அதன்பின் உங்கள் கோரலுக்கான இழப்பீட்டின் அளவினை ஆணையர் அவர்கள் முன்னெடுத்து அறிவிப்பார்.

வல்லுநர் மதிப்பீடு என்றால் என்ன?

வல்லுநர் மதிப்பீடு என்பது ஒரு சார்பற்ற மூன்றாம்-தரப்பு வல்லுநரை உட்படுத்தி ஒரு மதிப்பீட்டை செய்து கொள்வதாகும்.

இந்த வல்லுநர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுவார்கள்?

OAIC-யினால் இனங்காணப்பட்டபடி, இந்த வல்லுநர்கள் சுதந்திரமானவர்களாக (பக்கச்?? சார்பற்றவர்களாக ) இருப்பார்கள். மற்றும் நியமிக்கப்பட்ட பணியினை ஏற்றுச்செய்வதற்கு பொருத்தமான தகுதிகளையும் அனுபவத்தையும் கொண்டிருப்பார்கள்.

இந்த வல்லுநர்கள், திணைக்களம் மற்றும் ஸ்லேட்டர் அன்ட் கோர்டன் ஆகிய இருவராலுமே (ஆக மொத்தத்தில், தரப்புகள்) தெரிவு செய்யப்படுவார்கள். இந்த வல்லுநர்கள் பற்றி இத்தரப்புகள் முடிவெடுத்த உடனேயே, இத்தரப்புகள் வல்லுனர்களின் பெயர்கள், அவர்களது பின்னணி விபரங்கள், தகுதிகள், மற்றும் அனுபவம், மற்றும் ஏன் பொருத்தமானவர்கள் என்பதற்கு ஒரு சுருக்கமான விளக்கம் ஆகியவற்றை, தகவல் ஆணையர் அவர்களின் ஒப்புதலுக்காக, OAIC-க்கு அளிப்பார்கள்.

இந்த வல்லுநர்கள் அவர்களது மதிப்பீட்டை எவ்வாறு செய்வார்கள்?

ஆணையரின் தீர்மானத்தின் கீழ் பொருளாதாரம் சார்ந்த மற்றும் பொருளாதாரம் சாராத இழப்பை மதிப்பிடுவதற்காக இங்கு வரையறுக்கப்பட்டுள்ள தகைமைகளுக்கு ஒத்தபடி, இந்த வல்லுநர் அவர்களது சிபாரிசினை செய்வார்.

பொருளாதாரம் சாராத இழப்புக்கு, மேலே அட்டவணை 1-இன் குறிப்புகளின்படி, இழப்பீட்டின் அளவு இந்த வல்லுநரால் ஒதுக்கீடு செய்யப்படும்.

அட்டவணை 1 பொருளாதாரம் சாராத இழப்புக்கான இழப்பீட்டைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுவதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது. பொருளாதார இழப்புக்கான சேதத்தை கணக்கிட்டுக் கொள்ள உதவும் நோக்கம் இதற்கு கிடையாது. பொருளாதார இழப்பின் இழப்பீடு அவரவர் சூழலுக்கு தக்கவாறு தனித்தனியாக மதிப்பிட்டுக் கொள்ளப்படும்.

இந்த வல்லுநர் மதிப்பீட்டு நடைமுறையானது ஆவணங்களின் அடிப்படையில் செய்து கொள்ளப்படும். பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினருக்கு வழங்க வேண்டிய தொகையினை சிபாரிப்பதற்கு இந்த வல்லுநர் கீழ்காண்பவற்றின் அடிப்படையில் ஒரு மதிப்பீட்டை செய்வார்:

  • பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள், அறிவிப்பினில் உள்ள காலக்கெடுவுக்கு முன்பாக OAIC-க்கு அளித்திருந்த சமர்ப்பிப்புகள் அல்லது/அத்துடன் இழப்பு அல்லது சேதம் குறித்த ஆதாரம்,
  • திணைக்களத்தினது மறுமதிப்பீடு (ஏதேனுமிருப்பின்) மற்றும் காரணங்கள்,
  • திணைக்களத்தினது மதிப்பீடு மற்றும் காரணங்கள்,
  • பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களது விடையளிக்கும் படிவ-த்தில் (ங்களில்) அடங்கியிருந்த தகவல்கள்.

இந்த வல்லுநர் அவர்களது சிபாரிசினையும் அத்துடன் சேர்ந்த காரணகளையும், நேரடியாக OAIC-க்கு அளிப்பார்; இதிலுள்ள தரப்புகளுக்கு நகலனுப்புவார்.

இந்த வல்லுநர் அவர்களது மதிப்பீட்டை செய்தலின் முன்போ பின்போ மேலதிக சமர்ப்பிப்புகள் அல்லது ஆதாரம் அளிப்பதற்கு எனக்கொரு வாய்ப்பளிக்கப்படுமா?

இல்லை.

இதிலுள்ள தரப்புகள் இந்த வல்லுநருக்கு மேலதிக சமர்ப்பிப்புகள் அல்லது ஆதாரம், வாய்மொழியாகவோ எழுத்து வழியாகவோ அளித்திட ஒரு வாய்ப்பைப் பெற மாட்டார்கள்.

இந்த வல்லுநரின் மதிப்பீடு கட்டுப்படுத்தக்கூடியதா?

இல்லை.

இந்த மதிப்பீடு ஒரு சிபாரிசு என்றளவில் செயலுருவம் கொண்டிருக்கும் மற்றும் இதிலுள்ள தரப்புகளைக் கட்டுப்படுத்தாது.

இந்த வல்லுநரின் மதிப்பீட்டை ஏற்கவோ நிராகரிக்கவோ எனக்கொரு வாய்ப்பளிக்கப்படுமா?

ஆம்.

இந்த வல்லுநரின் மதிப்பீட்டுக்கு மறுமொழியாக சமர்ப்பிப்புகளோ ஆதாரமோ அளித்திட உரிமை இருக்காது. ஆயினும் இந்த வல்லுநரின் மதிப்பீட்டை ஏற்கவோ நிராகரிக்கவோ நீங்கள் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

இந்த வல்லுநரின் மதிப்பீட்டோடு நான் உடன்பட்டால் என்னவாகும்?

இந்த வல்லுநரின் மதிப்பீட்டோடு நீங்கள் உடன்பட்டால் நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை திணைக்களத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பீட்டோடு திணைக்களமும் கூட உடன்படுமாயின், திணைக்களமானது இழப்பீடுக்கான உடன்பட்ட தொகையினை ஏற்றுக்கொள்ளத்தக்க காலத்திற்குள்ளாக உங்களுக்கு செலுத்தி விடுவார்கள். பொதுவாக, உடன்பாடு எட்டப்பட்ட 14 நாட்களுக்கு உள்ளாக, ஏதேனும் திரும்பப்பெறவேண்டிய கடப்பாடுகள் குறித்து அவ்வாறு பொருந்தினால், மெடிக்கேரிடமிருந்து உறுதிப்பாட்டுக்குட்பட்டு, இது நிகழ்ந்து விடும்.

உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற சில குறிப்பிட்ட தொழில்நிபுணத்துவ சேவைகள் சம்பந்தமாக, ஆனால் மெடிக்கேரால் செலுத்தப்பட்டு விட்ட வகையில், திரும்பப்பெறுதல்  மற்றும் அறிவிக்கை கடப்பாடுகள் எழுகின்றன. கூடுதல் தகவல்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வல்லுநரின் மதிப்பீட்டோடு திணைக்களமோ நானோ உடன்படா விட்டால் என்னவாகும்?

உங்களது கோரல் குறித்து இந்த வல்லுநரின் மதிப்பீட்டோடு நீங்கள் உடன்படாவிட்டால், நீங்கள் உடன்படவில்லை என்பதனை ஆணையர் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரண்டில் ஒன்றாக, உங்களுக்கு மாறாக உங்களது கோரல் குறித்து இந்த வல்லுநரின் மதிப்பீட்டோடு திணைக்களமானது உடன்படாமல் இருக்கலாம். இவாறான இரண்டு சூழ்நிலைகளிலுமே உங்கள் கோரலுக்கான இழப்பீட்டுத் தொகையினை ஆணையர் அவர்கள் தீர்மானம் செய்வார். இது இயலுமானவரை குறுகிய காலத்தில் நிகழ்ந்து விடும் என்றாலும் இந்த தீர்மானம் செய்யப்பட்ட திகதியிலிருந்து 12 மாதங்களுக்கு மேல் மிகாது.

தீர்மானத்திற்குப் பிறகு, ஆணையர் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையினை திணைக்களமானது ஏற்றுக்கொள்ளத்தக்க காலத்திற்குள்ளாக உங்களுக்கு செலுத்தி விடுவார்கள். பொதுவாக, உடன்பாடு எட்டப்பட்ட 14 நாட்களுக்கு உள்ளாக, ஏதேனும் திரும்பப்பெறவேண்டிய கடப்பாடுகள் குறித்து அவ்வாறு பொருந்தினால், மெடிக்கேரிடமிருந்து உறுதிப்பாட்டுக்குட்பட்டு, இது நிகழ்ந்து விடும்.

பிரதிநிதித்துவ புகார்தாரரின் பங்கு என்ன?

பிரதிநிதித்துவ புகார்தாரரானவர் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்கள் சார்பாக இந்த அந்தரங்கத்தன்மை குறைபாட்டினை OAIC-க்கு செய்தார் என்பதோடு ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். பிரதிநிதித்துவ புகார்தாரருக்காக ஸ்லேட்டர் அன்ட் கோர்டன் செயல்படுகிறார்கள்

பிரதிநிதித்துவ புகார்தாரரானவர், திணைக்களத்துடன் இணைந்து இந்த வல்லுநர்(கள்)-ஐத் தெரிவு செய்து கொள்வது மற்றும் பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்க்கான கடிதத் தொடர்பு அச்சினை இறுதிப்படுத்துவதில் உதவிசெய்வது போன்றதான ஒத்த பண்புடைய குழு உறுப்பினர்களின் கோரல்களை பொதுவாக மேலாண்மை செய்து கொள்வதற்காக, இந்த நடைமுறையில் அவரது அவரது பங்களிப்பை செய்து வந்திருக்கிறார் தொடர்ந்தும் செய்து வருவார் எனும் அதே வேளையில், ஒவ்வொரு கோரலையும் தீர்வுசெய்வதில் பிரதிநிதித்துவ புகார்தாரருக்கு ஒரு பங்கும் இல்லை.

திணைக்களத்தினது பங்கு என்ன?

திணைக்களத்தின் பங்காவது:

  • மேலேயுள்ள அட்டவணை 1-இல் கோரலானது, எந்த வகை இழப்பு அல்லது சேதத்தின் கீழ்வரும் என்பதை மதிப்பிடுவது
  • கோரல் குறித்து செலுத்த வேண்டிய ஓர் இழப்பீட்டுத் தொகையை முன்மொழிவது
  • ஒவ்வொரு பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினருடனும் இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து உடன்பாடை நாடுவது
  • பிணக்கான ஒரு கோரல் குறித்து ஒரு  மறுமதிப்பீட்டினை, அவ்வாறு அவர்கள் செய்து கொள்ள விரும்பினால், ஏற்றுச் செய்வது
  • பிரதிநிதித்துவ புகார்தாரருடன் இணைந்து இந்த வல்லுநர்(கள்)-ஐ ஆணையர் அவர்களின் ஒப்புதலுக்காக முன்வைப்பது
  • சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அந்த ஒத்த பண்புடைய குழு உறுப்பினருடன் இணைந்து வல்லுநர் மதிப்பீட்டில் ஈடுபடுவது
  • தீர்வுசெய்யப்படாமல் நிலுவையிலிருக்கும் கோரல்கள் குறித்து OAIC-க்கு தெரிவிப்பது.

ஆணையர் அவர்களின்  பங்கு என்ன?

ஆணையர் அவர்கள் இந்த நடைமுறையினை கண்காணித்துக் கொள்வார். மற்றும் இந்த நடைமுறையின் இறுதியின் போது தீர்வு செய்யப்படாமல் நிலுவயிலிருக்கும் கோரல்கள் ஏதேனுமிருப்பின் அவற்றுக்கு செலுத்தவேண்டிய இழப்பீட்டுத் தொகையினை தீர்மானிப்பார்.

இந்த நடைமுறையினை கண்காணித்துக் கொள்வதில், ஒரு பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினர் இந்தத் தீர்மானத்தின் கீழ் ஒரு தொகையினது செலுத்தலுக்கு தனக்கான (அவனது அல்லது அவளது) உரிமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு எந்தப் பாங்கில் இருந்துகொள்வது அல்லது ஒரு பங்குபெறும் ஒத்த பண்புடைய குழு உறுப்பினரது இந்த செலுத்தலுக்கான உரிமைப்பாட்டினைக் குறித்த ஏதேனும் பிணக்கு பற்றி தீர்மானித்துக் கொள்வதற்கான பாங்கு குறித்து ஆணையர் அவர்கள் தாம் நியாயமானவை என்று எண்ணுகிற விதத்தில் அதன்படி மேலதிக வழிகாட்டுதல்கள் கொடுக்கக்கூடும்.

கடந்தகால மெடிக்கேர் பயனளிப்புகளைப் பெற்றுக்கொண்டது இந்த இழப்பீட்டின் செலுத்தலை எவ்வாறு பாதிக்கும்?

உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற, ஆனால் மெடிக்கேரால் செலுத்தப்பட்டு விட்ட சில குறிப்பிட்ட தொழில் நிபுணத்துவ சேவைகள் தொடர்பாக திரும்பப்பெறல் மற்றும் அறிவிக்கை கட்டுப்பாடுகள் எழுகின்றன.

தகவல் கசிவின் ஒரு விளைவாக உங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையானது $5000-க்கு மேலாக இருந்து, அத்துடன் நீங்கள் ஒரு மெடிக்கேர் அட்டையை வைத்திருப்பவராக இருந்தால், ஏதேனும் இழப்பீடு உங்களுக்கு செலுத்திட முடியும் என்பதற்கு முன்னதாக மெடிக்கேரிடமிருந்து கடந்தகால பயனளிப்புகளுக்கான ஓர் அறிவிப்பை நீங்கள் வேண்டுவதற்கான தேவை இருக்கும். ஒரு கடந்தகால பயனளிப்புகளுக்கான அறிவிப்பை வேண்டிக்கொள்வதில் முதல் படிநிலையாக இருப்பது ஒரு மெடிக்கேர் வரலாறு தெரிவிப்பட்டவணையை வேண்டுவதாகும். கீழ்காணும் இணையதளத்திற்கு சென்று பார்வையிடுவதன் வழியாக நீங்கள் ஒரு மெடிக்கேர் வரலாறு தெரிவிப்பட்டவணையை வேண்ட முடியும்:  https://www.servicesaustralia.gov.au/individuals/forms/mo026.

ஓர் இழப்பீட்டு வழங்கல் எனது சென்டர்லிங்க் கொடுப்பனவுகளை பாதிக்குமா?

உங்களுக்கான ஓர் இழப்பீட்டு வழங்கல் நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் ஏதேனும் சென்டர்லிங்க் கொடுப்பனவுகளையும் பாதிக்கக்கூடும். நீங்கள் சென்டர்லிங்க் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டிருந்தால், உங்களது தனிப்பட்ட சூழ்நிலைகளின் மீதான ஏதேனும் பாதிப்பினை கலந்தாலோசித்திட சென்டர்லிங்க்கை 1800 777 653 அல்லது 131 202 (பன்மொழி தொலைபேசி சேவை) வழியாக நீங்கள் அழைத்திட வேண்டும்.

இலவச செயலுதவியை நான் எங்கே பெற முடியும்?

நீங்கள் விக்டோரியாவில் (VIC) வசித்தால்:

ரெஃபியூஜீ  லீகல் (Refugee Legal)

மின்னஞ்சல்: refugeelegal@refugeelegal.org.au

தொலைபேசி: (03) 9413 0100

புதன் அல்லது வெள்ளி

காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை

அல்லது

அசைலம் சீக்கர் ரீசோர்ஸ் சென்டர்

(Asylum Seeker Resource Centre – ஏஎஸ்ஆர்சீ)

மின்னஞ்சல்: legal_triage@asrc.org.au

தொலைபேசி: (03) 9274 9827

திங்கள் முதல் வியாழன் வரை

பிற்பகல் 2 முதல் 4 மணி வரை

நீங்கள் நியூ சவுத் வேல்ஸ் (NSW) அல்லது ஆஸ்திரேலிய தலைநகர்ப் பிரதேசம் (ACT) அல்லது குவீன்ஸ்லாந்தில் (QLD) தடுப்புக்காவலில் வசித்தால்:

ரெஃபியூஜீ அட்வைஸ் அன்ட் கேஸ்வேர்க்  (ரக்ஸ் - Refugee Advice & Casework Service (Aust) Inc)

மின்னஞ்சல்: admin@racs.org.au

தொலைபேசி (02) 8355 7227

நீங்கள் சவுத்ஆஸ்திரேலியா(SA) அல்லது டாஸ்மானியா-வில்(TAS) வசித்தால்

ரெஃபியூஜீ  லீகல் (Refugee Legal)

மின்னஞ்சல்: refugeelegal@refugeelegal.org.au

தொலைபேசி: (03) 9413 0100

புதன் அல்லது வெள்ளி

காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை

நீங்கள் வடக்குப் பிரதேசத்தில் (நோர்தன் டெரிட்டரி -NT) வசித்தால்:

ரெஃபியூஜீ அட்வைஸ் அன்ட் கேஸ்வேர்க்  (ரக்ஸ் - Refugee Advice & Casework Service (Aust) Inc)

மின்னஞ்சல்: admin@racs.org.au

தொலைபேசி (02) 8355 7227

ரெஃபியூஜீ  லீகல் (Refugee Legal)

மின்னஞ்சல்: refugeelegal@refugeelegal.org.au

தொலைபேசி: (03) 9413 0100

புதன் அல்லது வெள்ளி

காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை

அல்லது

நீங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் (வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - WA) வசித்தால்

ரெஃபியூஜீ  லீகல் (Refugee Legal)

மின்னஞ்சல்: refugeelegal@refugeelegal.org.au

தொலைபேசி: (03) 9413 0100

புதன் அல்லது வெள்ளி

காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை

அல்லது

சேர்க்கிள் கிரீன் கொம்யூனிட்டி லீகல் (Circle Green Community Legal)

மின்னஞ்சல்: migration@circlegreen.org.au

தொலைபேசி: (08) 6148 3636

நேரில் செல்ல:

செவ்வாய் மட்டும் பிற்பகல் 2க்கும் 5க்கும் இடையில்

அசைலம் சீக்கர் ஹப்

ரிவர்வியூ சர்ச்

1 தொரோகுட் ஸ்ட்ரீட்

பர்ஸ்வுட் WA 6100

(1 Thorogood Street

Burswood WA 6100)

நீங்கள் ஆஸ்திரேலியாவில் தடுப்புக்காவலினுள் இருந்தால்

அசைலம் சீக்கர் ரீசோர்ஸ் சென்டர்

(Asylum Seeker Resource Centre – ஏஎஸ்ஆர்சீ)

மின்னஞ்சல்: legal_triage@asrc.org.au

தொலைபேசி: (03) 9274 9827

திங்கள் முதல் வியாழன் வரை

பிற்பகல் 2 முதல் 4 மணி வரை

நீங்கள் குவீன்ஸ்லாந்தில் (QLD) வசித்தால் அல்லது மேலே பட்டியலிடப்பட்ட அமைப்புகள் உங்களது பதிலளிக்க இயலா விட்டால் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்:

ஸ்லேட்டர் அன்ட் கோர்டன் சட்டத்தரணிகள்

மின்னஞ்சல்: databreach@slatergordon.com.au

தொலைபேசி: (03) 9602 8658

மேலதிக தகவல்

இந்த விடயம் பற்றி உங்களுக்கு ஏதேனும் மேலதிக விசாரணைகள் இருப்பின் நீங்கள் OAIC- யை enquiries@oaic.gov.au இந்த மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் உங்களுக்கு OAIC-யிடமிருந்து செயலுதவி தேவைப்படின், தயவு செய்து மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவையை 131450-இல் அழையுங்கள். பின்னர் 1300 363 992-க்கு இணைப்பு கேளுங்கள். தற்சமயத்தில் OAIC-யானது செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை தொலைபேசி விசாரணைகளை ஏற்கிறது.

இலவச மொழிபெயர்ப்பு செயலுதவி

தமது அனைத்து கடிதத்தொடர்பாடல்களையும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள 20 மொழிகளுக்குள் ஒன்றினில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். ஒருவேளை ஆங்கிலம் அல்லாத வேறு ஒரு மொழியில் தொடர்பாடல்களை விரும்புவார்களா என்பதை சுட்டிக்காட்டுமாறு, இந்த நடைமுறையினது தொடக்கத்திலேயே திணைக்களத்தினால் நீங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, கேட்டுக்கொள்ளப் படுவீர்கள்.

திணைக்களமானது நீங்கள் அவர்களுக்கு சமர்ப்பிக்கும் ஏதேனும் தகவல்களையும், கீழேயுள்ள மொழிகளில் ஒன்றில், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கும் கூட ஏற்பாடு செய்வார்கள்.

இவ்வாறான மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான செலவினங்களை திணைக்களமானது கவனித்துக் கொள்ளும்.